புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 7 வது அமர்வு புதுக்கிடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செ பிறேமகாந்த் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்ப்பட்ட சபை என்ற வார்த்தைப்பிரயோகம் 5 அமர்வில் பேசப்பட்டதால் அதற்க்கு எதிராக கடந்த சபை அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிந்த ஏனைய கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் அன்றைய தினம் அமர்வுகளை செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது
இருப்பினும் இன்றைய அமர்வில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளதோடு ஊடகங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது இன்றைய தினம் சபையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றன
இதேவேளை கட்சி சார்பான விடயங்களை சபை அமர்வில் கதைப்பதை தவிர்க்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது