புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரவு நேரங்களில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை….

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரவு நேரங்களில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கால்நடைகளை கட்டுப்படுத்துவதாக பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ள போதும் ஒருநாள் மாடுகளை பிடித்துவிட்டு பின்னர் பிடிக்காமல் விட்டுள்ளார்கள்.

இதனால் குறித்த கட்டாக்காலி கால்நடைகள் பகல் மற்றும்  இரவு வேளைகளில் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியிலேயே காணப்படுகின்றன இவ்வாறான நிலை நகரமயமாகும்  நோக்கினை நோக்கி  நகர்ந்து செல்லும் நகரங்களுக்கு பின்னடைவை தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

எனவே சம்மந்தப்பட்ட தரப்பினர் தொடர் நடவடிக்கை மூலம் குறித்த பிரச்னைக்கு தீர்வு கண்டு நகரின் அழகை பேணுவதோடு  வீண் விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் தடுக்க வேண்டுமென கோரப்படுகிறது

குறிப்பாக ஒருதொகுதி கட்டாக்காலி கால்நடைகள் புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளரின் இல்லத்துக்கு முன்பாக நாளாந்தம் கிரப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது  

கட்டாக்காலிகால்நடைதொல்லைபுதுக்குடியிருப்பு
Comments (0)
Add Comment