புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் 11-ம் தேதி வெளியிடப்படும்: சந்தீப் சக்சேனா தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து முதல் கட்ட ஆலோசனை கூட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம், புதுவை, அசாம், மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட5 மாநிலங்களில் வரும் மே மாதத்துக்குள் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். ஜூன் 2-ம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகளை முடிக்க வேண்டும். இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா சனிக்கிழமை புதுவைக்கு வந்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில அதிகாரிகளுடன் முதல்கட்ட ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் தேதிகள், வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு குறித்து அவர் ஆய்வு செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா, வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் பிழையின்றி தயாரிக்க வேண்டும், வாக்களிக்கத் தகுதியான அனைவரது பெயரும் பட்டியலில் இடம் பெற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தல்சந்தீப் சக்சேனாபுதுச்சேரிவாக்காளர் பட்டியல்
Comments (0)
Add Comment