புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டம்

இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான நான்காவது கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. கடந்த 6ம் நாள் தொடக்கம். 8ம் நாள் வரை இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா கடற்படையின், நடவடிக்கைத் தளபதி றியர் அட்மிரல் நீல் றொசாரியோ தலைமைலான, 5 கடற்படை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா தரப்பில் பங்கேற்றனர்.

இந்தியக் கடற்படை தரப்பில், இந்தியக் கடற்படையின் வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கான உதவித் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் ஆர்.பி.பண்டிட் தலைமையிலான 16 பேர் கொண்ட இந்தியக் கடற்படை அதிகாரிகள் இந்தியா தரப்பில் பங்கேற்றனர்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மற்றும் பயிற்சிகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.அத்துடன், இரு நாட்டுக் கடற்படைகளும் நடவடிக்கைகளின் போது, களப்பயிற்சி மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இடையிலானஇந்திய – சிறிலங்காகடற்படைகளுக்குகூட்டம்நடைபெற்றுள்ளது.நான்காவதுபுதுடெல்லியில்
Comments (0)
Add Comment