புதுவை முதல்வர் பதவி யாருக்கு? காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கருத்துக் கேட்பு!

புதுச்சேரி முதல்வர் பதவி நியமனம் தொடர்பாக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் அந்தக் கட்சியைச் சேர்ந்த மேலிடப் பார்வையாளர்கள் கலந்து கொண்டு எம்எல்ஏக்களிடம் கருத்துக்கேட்க உள்ளனர்.

 இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

 புதுச்சேரி முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை ஹோட்டல் அசோகாவில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

 இதில், மேலிடப் பார்வையாளர்கள் ஷீலாதீட்சித், முகுல்வாஸ்னிக் ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்கள் எம்எல்ஏ-க்களிடம் கருத்துகளைக் கேட்டு கட்சித் தலைமைக்கு தெரிவிப்பர். பின்னர், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி, காங்கிரஸ் சட்டப் பேரவை கட்சித் தலைவர் யார் என அறிவிக்கப்படுவார். கட்சியில் உழைத்த அனைவருக்கும் முதல்வர் பதவி கேட்கும் உரிமை உள்ளது என்றார் நமச்சிவாயம்.

எம்எல்ஏகருத்துக் கேட்புகாங்கிரஸ்புதுவைமுதல்வர் பதவி
Comments (0)
Add Comment