15 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை, எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது. தமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டியே இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய, விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, இன்று விடுக்கப்படலாம் என்றும், வர்த்தமானி அறிவித்தல் நாளை (11) வெளியிடப்படலாம் என்றும் நிதியமைச்சின் தகவல் தெரிவிக்கின்றது.