யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள்இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அரசியல் பழிவாங்கல் காரணமாகவே குறித்த கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடமாற்றத்தை ரத்துச் செய்ய வேண்டுமெனவும் குறித்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் 208 கிராம சேவகருக்கு கடந்த சில தினங்களிற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராக அப் பகுதிமக்கள் கடுமையான எதிர்ப்பைவெளியிட்டு வந்திருந்தனர்.
இந் நிலையில் அந்தஇடமாற்றத்தைக் கண்டித்தும் இடமாற்றத்தை இரத்துச்செய்ய வலியுறுத்தியும் குறித்த கிராம சேவகர் அலுவலகம் முன்பாக அவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்து தமக்கு முன்னர் இருந்த கிராமசேவகரையே மீள நியமிக்கவேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.