புலம்பெயர் தமிழர்களினால் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்!

புலம்பெயர் தமிழர்களின் விருப்பத்திற்கு அமையவே புதிய உத்தேச அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டில் மாற்றம் ஒன்றை கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேசத்தின் ஆதரவும் குறைந்துள்ளது.

அரசாங்கத்தினால் தேர்தல் ஒன்றை நடத்த முடியாமல் உள்ளது. தேரர்களின் மத்தியில் மோதல் நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, மேற்குலக நாடுகளுக்கு அடிபணிந்தே இலங்கை செயற்படுகின்றது.

இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களின் விருப்பத்திற்கு அமையவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திலும் அமுனுகம்நாடாளுமன்ற உறுப்பினர்புலம்பெயர் தமிழர்கள்
Comments (0)
Add Comment