புலிப்போராளிகளின் உயிர்த்தியாகம் 1988இல் நடந்த ஓர் உண்மைச்சம்பவம்

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு ஒரு சமயம் இந்திய இராணுவமே புலிகளின் தியாகத்தினை பார்த்து இராணுவ மரியாதை செய்து நினைவுத்தூபி அமைத்த  சம்பவத்தினை நினைவு கூறுகிறோம்.

கடந்த 1988 ம் ஆண்டு வன்னியின் கனகராயன் குளம் எனும் இடத்தில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இந்திய இராணுவ வாகனத்தின்  மீது தாக்குதல் நடத்துவதற்காக இரண்டு புலிப்போராளிகள் A9 பிரதான வீதியின் நடுப்பகுதியில் கண்ணிவெடியினை புதைத்து வைத்து இராணுவ வாகனத்தின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

இரு நாட்களாக வேவு பார்த்து திட்டமிட்டு தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் அவர்கள். பல மணி நேரத்திற்கு பின்னர் இராணுவ வாகனம் வருவதை பார்த்ததும் கெரில்லா தாக்குதலுக்கு தயாரானார்கள். அந்த காலத்தில் புலிகளிடம் போதியளவு ஆயுதங்கள் இல்லை. எனவே இவ்வாறு தாக்குதல் நடத்தி இராணுவத்திடமிருந்து எடுத்து செல்வார்கள்.

அப்படி ஆயுதங்கள் கைப்பற்றி கொண்டு செல்லும் போராளிகளுக்கு ஏனைய போராளிகளிடத்தில் ஒரு மதிப்பு. எனவே அந்த இரண்டு போராளிகளும் உள்ளத்தில் பூரிப்போடு பதுங்கியிருந்தனர்.

இந்திய இராணுவ வாகனமும் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வவுனியா கிறிஸ்தவ இல்லத்தில் உள்ள அனாதை குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேரூந்து வந்ததை அந்த போராளிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இராணுவ வாகனத்திற்கு பின்னால் வந்துகொண்டிருந்த அந்த பேரூந்தில் குழந்தைகள் குதூகலத்துடன் கைகளை வெளியே காட்டியவாறு வருவதை அவதானித்த போராளிகள் செய்வதறியாது இருந்தனர். பின்ன்னால் வந்துகொண்டிருந்த குழந்தைகளின் பேரூந்தினை முந்திச்செல்ல இராணுவ வாகனம் வழி விடுகிறது.

அந்த குழந்தைகளின் பேரூந்து கண்ணிவெடியில் அகப்பட்டால் அனைத்து குழந்தைகளுமே கொல்லப்படுவார்கள். இதனால் அந்த இடத்தில் இரு போராளிகளும் தங்களைத்  தியாகம் செய்ய துணிந்தனர். உடனடியாக இருவரும் ஓடிச்சென்று அந்த கண்ணிவெடியின் மேல் ஏறி நின்றதும் அது பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது.

இரு போராளிகளும் அந்த குழந்தைகளுக்காக உயிர் தியாகம் செய்தனர். இதனை அவதானித்த இந்திய இராணுவத்தினர் அந்த இடத்தில் வேகமாக இறங்கி தற்காப்பு தாக்குதலுக்கு தாயாகின்றனர்.

வேறு போராளிகள் இல்லை எனத்தெரிந்ததும் அவர்களுக்கு புலிப்போராளிகள் அந்த அனாதை பிள்ளைகளுக்காக தங்களை தியாகம் செய்து விட்டதை அறிந்து கொண்டனர்.

அந்த இராணுவ வாகனத்தில் இருந்த அனைத்து இராணுவ வீரர்களும் அந்த இரு மாவீரர்களுக்கும் இராணுவ மரியாதை செய்து விட்டு செல்கின்றனர். இந்த தகவலை கூறியதும்  ஒரு இந்திய இராணுவ வீரர் தான்.

பின்னர் ஓரிரு நாட்களில் அந்த இடத்தில் அவர்கள் இருவரின் தியாகத்தினை மெச்சி அவர்களுக்கு நினைவு கல்லறை அமைத்தனர். அந்த நினைவு தூபி 2009ம் ஆண்டு வரை இருந்தது. தற்போதும்இருக்கலாம்.

இப்படி விடுதலைப்புலி போராளிகளின் தியாகங்கள் பல. .எம் மாவீரர்களின் தியாகத்தினால் தான் நாம் இன்றும் உலகில் ஓர் அடையாளத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Tamil Tigers tru Story
Comments (0)
Add Comment