புழலில் சிக்கும் தொலைபேசிகள் – ஒரு அழைப்புக்கு 500 ரூபாய்

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது29). இவர் மீது தாம்பரம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  இந்த வழக்குகள் தொடர்பாக சூர்யா கடந்த பிப்ரவரி மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான்.  புழல் ஜெயில் உயர் பாதுகாப்பு பிரிவு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சூர்யாவுடன் மேலும் 7 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  இன்று காலை ஜெயில் சூப்பிரண்டு அன்பழகன் ஜெயில் அறையில் சோதனை நடத்தினார்.

அப்போது சூர்யா அடைக்கப்பட்டுள்ள அறையில் செல்போன் சிக்கியது. விசாரணையில் அந்த செல்போனை சூர்யா பயன்படுத்தியது தெரிய வந்தது.  இது தொடர்பாக ஜெயில் சூப்பிரண்டு அன்பழகன் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறிமுதல் செய்தார்.  சூர்யா சிறையில் இருந்த படி யாருடன் செல்போனில் பேசினார்.

அவர் கொலை திட்டம் தீட்டினாரா? என்பது பற்றி விசாரணை நடத்தினார்.  புழல் ஜெயிலில் கடந்த வாரம் தணிகாசலம் என்ற கைதி அடைக்கப்பட்டிருந்த அறையில் 2 செல்போன்கள் சிக்கின.  புழல் ஜெயிலில் சமீப காலமாக கைதிகளின் அறையில் செல்போன்கள் பிடிபடுகின்றன. ஜெயில் போலீசார் சிலர் தங்களின் ஷூவுக்குள் மறைத்து வைத்து செல்போனை எடுத்து சென்று கைதிகளுக்கு கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் 1 போன் பேசுவதற்காக கைதிகளிடம் ரூ. 500 வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. கைதிகள் ஜெயிலில் இருந்தபடியே செல்போனில் பேசி கொலை திட்டம் தீட்டுவதாகவும் தொழில் அதிபர்களுக்கு போன் செய்து தங்களின் ஆட்கள் வந்தால் பணம் கொடுக்கும்படி மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு சிறை போலீசார் சிலர் கஞ்சாவும் சப்ளை செய்கிறார்கள். கடந்த வாரம் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக சிறை போலீசார் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதன் தொடர்ச்சியாக தற்போது ஜெயில் சூப்பிரண்டு நடத்திய அதிரடி சோதனையில் மீண்டும் கைதியிடம் செல்போன் சிக்கியுள்ளது.

அழைப்புகைதுசூர்யாசென்னைதாம்பரம்தொலைபேசிகள்புழல் ஜெயில்
Comments (0)
Add Comment