பெண்களைத் தாக்கி தங்கநகைகளை திருடிச்சென்ற திருடர்கள் – யாழில் சம்பவம்..

யாழ் உரும்பிராய்ப் பகுதியில் வீடு ஒன்றில்  திருடர்கள் வீட்டிலிருந்த பெண்களைச் சரமாரியதாகத் தாக்கி பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

குறித்த சம்பவம் நேற்றைய தினம்  இடம்பெற்றுள்ளது.

அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் பெண்களைத் தாக்கி அவர்களைக் கட்டிவைத்து  அவர்கள் அணிந்திருந்த ஆறு பவுண்  தங்கநகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில்  கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது

சம்பவம்தங்கநகைகள்திருடர்கள்பெண்கள்யாழில்
Comments (0)
Add Comment