பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வையும்,தமிழ்பற்றையும் ஊட்டி வளக்கவேண்டும் என சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
29.01.19 அன்று மாங்குளம் பனிக்கன்குளம் அ.த.க.பாடசாலை மாணவர்களின் விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன் பிரதம விருந்தினர் உரையினையும் நிகழ்த்தும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
இந்த பாடசாலை பௌதீக நிலமைகளை பார்க்கின்ற பொழுது பின்பக்த்தில் யானை உட்புகக்கூடிய காடு வகுப்பறை வசதியற்ற வகுப்பறை கட்டிடங்கள் சுத்தமான குடிநீர் இன்மை போன்ற பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில்தான் இயங்கி வருகின்றது. ஆனாலும் சாதாரணமான வசதியுடைய பாடசாலையில் இயங்குகின்ற பிள்ளைகள் போல் அத்தனை கற்றல் கற்பித்தல் ஏனைய செயற்பாடுகள் அனைத்தினையும் சிறப்புடன் நடாத்துகின்ற கல்வி வலயம் அதனுடன் இணைந்த உத்தியோகத்தர்களையும் நான் பாராட்டுகின்ரேன்.
இதில் அன்பான தாய்மாருக்கு நான் ஒன்றினை சொல்லுகின்றேன் இந்த மழலை செல்வங்களுக்கு எது சரி எது பிழை என்று தெரியாது இவர்கள்தான் நாளை எங்களின் விருட்சங்கள் இவர்களை நல்லவர்களாக வல்லவர்களாக உருவாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தாயின் கைகளில்தான் இருக்கின்றது.
மீள்குடியேற்றத்தின் பின் எங்கள் கலை,கலாச்சாரம் ஒழுக்கம் விழுமியங்கள் அனைத்தும் திட்டமிட்டு ஆரம்பத்தில் கெடுக்கப்பட்டது இன்று நாம் அனைவரும் கெடுக்ப்பட்ட வழியில் கெட்டுக்கொண்டு இருக்கின்றோம் என்பது உண்மை.
பிள்ளைகளின் வினோத உடையில் அவர்கள் பெற்றோர்களுக்கு செய்திகளை சொல்கின்றார்களா என்று வியக்கவேண்டி உள்ளது மதுபோதை ஒழிப்பு,தொலைபேசி பாவனை தொலைக்காட்சி பாவனை போன்ற செய்திகள் சாதரணமான செய்திகள் அல்ல இவைதான் இன்று எம் இனத்தினை மீண்டு எழமுடியாது வீழ்திக்கொண்டிருக்கின்றது
உண்மையில் மாற்றான் அதில் வெற்றி கண்டுவிட்டான் வீழ்ந்து கொண்டிருப்பது எங்கள் இனம் என்பதை ஒவ்வொரு தாயும் உணரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் வீட்டுசூழலில் பிள்ளைகள் வளரக்கூடிய நல்ல சூழ்நிலையினை ஏற்படுத்திக்கொடுங்கள் ஒவ்வொரு தாய்கும் இருக்கின்றகடமை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க்கின்ற அதேவேளை சோறு ஊட்டும் பொழுதும்,பால் ஊட்டும்பொழுதும் தமிழ் உணர்வையும்,தமிழ்பற்றையும் ஊட்டி வளர்க்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.