மேலும் மருத்துவமனையில் கைதிகளுக்கென உள்ள சிறப்பு வார்டில் பேரறிவாளனை அனுமதிக்கப்படவுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி இளங்கோ தெரிவித்துள்ளார். சிறுநீரக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 3-ஆவது முறையாக இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.