ஸ்ரீ அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையங்கள், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் போன்றவற்றின் ஊடாக ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இவ்வாறு ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த பொது மன்னிப்புக் காலத்தை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இரண்டாவது தடவையாகவும் பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என ஜயனாத் ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.