பொய்யின் மறுஉருவம் தான் ஜெயலலிதா – விஜயகாந்த் தாக்கு

சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி 160க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர், பொய்யின் மறுஉருவம் தான் ஜெயலலிதா என்று கடுமையாக விமர்சித்தார்.   கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள சாலைகள் முழுவதும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக குற்றம்சாட்டினார்.

தமிழகத்தை தலை நிமிர வைக்கப் போவதாகக் கூறும் ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களையும், தொண்டர்களையும் தலை நிமிர வைப்பாரா என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.  கூட்டத்தில் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் கூச்சலிட்டதால், சற்றே கோபப்பட்ட விஜயகாந்த், அவர்களை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தினார்.

சட்டமன்றம்தேமுதிகதேர்தல்நலக்கூட்டணிபிரச்சாரம்மக்கள்விஜயகாந்த்
Comments (0)
Add Comment