பொருத்தமான நேரத்தில் மஹிந்தவுடன் இணைய தயாராக உள்ளேன் – ஸ்ரீ.சு.க அமைச்சர்

அமைச்சர் பதவியை பெற்றிருந்தாலும் தான் இன்னும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனேயே இருப்பதாக பிரபல நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகிக்கும் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான நேரத்தில் மஹிந்த ராஜபக்சவுடன் இணைய தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சுகவீனமாக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் நலன் அறிய அவரது வீட்டுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

பதவி ஆசையில் அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினரால், ஸ்ரீவங்கா சுதந்திரக் கட்சியினருக்கு ஏற்படும் தொந்தரவை கவனத்தில் கொண்டே அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்இணைவுசுதந்திரக் கட்சிதயார்மஹிந்தராஜபக்சஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment