பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் : ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

சர்வதேச நாடுகளின் மைய வங்கிகள் புதிய விதிகளை வகுக்கத் தவறினால், உலகப் பொருளாதாரம் 1930களில் சந்தித்தது போன்ற நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

மேலும் லண்டன் வர்த்தகக் கல்வி மையத்தின் மாநாட்டில் பங்கேற்றுப் பேசியபோது இத்தகவலை ராஜன் தெரிவித்துள்ளார். பொருளாதார சிக்கல்களுக்கு சிறப்பான தீர்வு காண்பதற்கு உதவக்கூடிய விதிகளை புதிதாக ஏற்படுத்த வேண்டியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

 சர்வதேச அளவில் விவாதித்து, சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி இதனை செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார். தவறினால் 1930களில் ஏற்பட்டது போன்ற பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்ற கவலை ஏற்படுவதாகவும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

எச்சரிக்கைசர்வதேச நாடுகள்நெருக்கடிபுதிய விதிகள்பொருளாதாரம்மைய வங்கிகள்ரகுராம் ராஜன்ரிசர்வ் வங்கி
Comments (0)
Add Comment