பொறுப்பாளர் திரு நா சங்கர் தலைமையிலான பிரதியினருக்கும் நெதர்லாந்து நாட்டின் வெளிவிவகார பிரிவின் பாராளுமன்றத்திற்கான பிரதியினருக்குமான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றது

உறவுகளுக்கு வணக்கம்
இன்று 21-06-2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 13:45 தொடக்கம் 14:20 மணிவரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நெதர்லாந்து கிளைப் பொறுப்பாளர் திரு நா சங்கர் தலைமையிலான பிரதியினருக்கும் நெதர்லாந்து நாட்டின் வெளிவிவகார பிரிவின் பாராளுமன்றத்திற்கான பிரதியினருக்குமான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றது.

 

இச்சந்திப்பில் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்தில் எமது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள், விடுதலை செய்யப்பட்ட போராளிகள் எதிர்கொள்ளும் நாளாந்த சவால்கள், யுத்தத்தில் கணவர்மாரை இழந்து நாளாந்த வாழ்வுக்காக எமது சகோதரிகள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சனைகள், போர்க்குற்ற விசாரணைகளின் இழுத்தடிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர் போராட்டம், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம், மற்றும் அரசியல் தீர்வுத்திட்டம் சம்பந்தமான விவகாரங்கள் மற்றும் நெதர்லாந்தில் எமது செயற்பாடுகள் சம்பந்தமான விபரங்கள் போன்ற விடயங்கள் எம்மால் கலந்துரையாடப்பட்டது. இதை மிகவும் கவனமாக செவிமடுத்த பிரதிநிதிகள் எம்மால் வழங்கப்பட்ட மகஐர் சனல் 4 ரால் வெளியிடப்பட்ட இறுதி யுத்தத்தில் சிங்கள பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பு காணொளி மற்றும் இனப்படுகொலை சம்பந்தமான ஆவணத்தொகுப்பு செல்வி தட்சா அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழினப்படுகொலை ஆவணக்கையேடு (Genocide Chronicle – part 1 & 2 ) ஆகியவற்றை ஏற்றுக்கொண்டதுடன், ஐரோப்பிய பாராளுமன்றின் வெளிவிவகார பிரதிநிதிகளின் அடுத்த சந்திப்பில் தாம் ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் சம்பந்தமாக ஆராய்வோம் என்றும் ஐரோப்பிய வெளிவிவகார பிரதிநிதிகளினூடான சந்திப்பு ஒன்றுக்கு எம்மை அழைத்து மேலும் விளக்கங்களை கேட்பதாகவும் உறுதியளித்தனர். இதில் சிறப்பம்சம் என்னவெனில் விடுதலைப்புலிகளோடு தொடர்புபடுத்தி தடைசெய்து பிறகு 2020 ம் ஆண்டு தடை நீக்கம் செய்யப்பட்ட எம்மோடு பேச முன்வந்தது இவர்களின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவே உணரமுடிகிறது. மற்றும் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வரலாற்றிலேயே மகளீர் அமைப்பின் பிரதிநிதி, இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டது மிகவும் சிறப்பம்சமாகும்.
நன்றி
அரசியல் பிரிவு
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நெதர்லாந்து.

Comments (0)
Add Comment