பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு!

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெகுவிரைவில் பதவி விலக வேண்டுமென   ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரு வாரங்களுக்குள் பொலிஸ்மா அதிபரை  பதவியை விலகுமாறு  ஜனாதிபதி  உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில்  கூறப்பட்டுள்ளது

இதேவேளை ஜனாதிபதியையும் ,  கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என பொது எதிரணியான மஹிந்த அணியினரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  நிலையிலேயே ஜனாதிபதி  பொலிஸ்மா அதிபரை பதிவியிலிருந்து விலக்க   முடிவெடுத்துள்ளதாக  அந்த  செய்தியில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிபதவிபொலிஸ்மா அதிபர்ராஜினாமா
Comments (0)
Add Comment