போக்குவரத்து தொழிலாளர்கள் ஒப்பந்தம் குறித்த 4 வது கட்ட பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்கள் 12 வது ஊதிய ஒப்பந்தம் குறித்த 4 வது கட்ட பேச்சுவார்த்தை இன்று திங்கட் கிழமை 30/03/2015 நடைபெறுகிறது.

12 வது ஊதிய ஒப்பந்தம் குறித்து போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அமைத்த குழுவுடன் பேசி வருகின்றனர். இதுவரை 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இன்று 4 வது கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக்கழக பயிற்சி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் 42 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என நம்புவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஊதியம்ஒப்பந்தம்கட்டம்கோரிக்கைதொழிலாளர்நிரந்தரம்பணிபேச்சுபோக்குவரத்துவார்த்தை
Comments (0)
Add Comment