போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை – ஜனாதிபதி ஆலோசனை

இலங்கையில் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மாத்திரம் தூக்குத் தண்டனை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

போதைப்பொருள்ள கடத்தல் தொடர்பில் குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள போதும், அவர்கள்  சிறைக்குள் இருந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குவதன் மூலம் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை நிறுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக  இலங்கையில் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்  ஜனாதிபதி ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆலோசனைஜனாதிபதிதூக்குத் தண்டனைபோதைப் பொருள் குற்றவாளிகளுக்கு
Comments (0)
Add Comment