இன்று காலை 11.30 மணியளவில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போயஸ்கார்டன் சென்றார். அவருடன் 5 கார்களில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வீரமணி, மணிகண்டன் உள்பட முக்கிய அமைச்சர்களும் சென்றிருந்தனர்.
போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ள சூழலில் அது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விவாதித் தாரா? அல்லது வேறு முக்கிய பிரச்சினை குறித்து விவாதித்தார்களா? என்று தெரியவில்லை.இதற்கிடையே சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளும் போயஸ் கார்டனுக்கு சென்று வந்தனர்.