போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளை கைப்பற்றியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு .

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது

இதன்போது சபையின்  தவிசாளர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்ப்பின் சார்பில் யோகநாதன் ரஜனியும், சுயேட்சைக்குழு இரண்டின் சார்பில், விநாயகமூர்த்தி ஆயுஸ்மனின் பெயர்களே பிரேரிக்கப்பட்டன.

திறந்த முறையில்  இடம்பெற்ற   வாக்கெடுப்பில், யோகநாதன் ரஜனிக்கு 9 வாக்குகளும், விநாயகமூர்த்தி ஆயுஸ்மனுக்கு 8 வாக்குக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில், தவிசாளராக யோகநாதன் ரஜனி தெரிவாகியுள்ளார்

இந்நிலையில்  பிரதித் தவிசாளர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாராயணபிள்ளை தருமலிங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜெயக்கொடி இந்துஜாவின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.

இருவரும் பெற்ற வாக்குகளில் தருமலிங்கத்திற்கு 9 வாக்குகளும், ஜெயக்கொடி இந்துஜாவிற்கு 8 வாக்குகளும் பெற்றதில் , பிரதித் தவிசாளராக நாராயணபிள்ளை தருமலிங்கம் தெரிவாகியுள்ளார்.

இதேவேளை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஞா.யோகநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனகராசா றஞ்சினியும் தெரிவு செய்யபட்டுள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆளையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற திறந்த வாக்கெடுப்பின் போதே இந்த தெரிவுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உப தவிசாளர்தமிழ் தேசிய கூட்டமைப்புதவிசாளர்மட்டக்களப்பு
Comments (0)
Add Comment