போற்குற்றத்தில் இருந்து படையினரை நேர்மையோடு விடுவிப்போம்!

யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து எமது படை­யி­னரை விடு­விப்­ப­தற்­காக நேர்­மை­யு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் அர­சாங்கம் செயற்­படும் எனத் தெரி­வித்­துள்ள ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்னை கொலை செய்­வ­தற்கு விடு­தலைப் புலிகள் ஐந்து தட­வைகள் முயற்­சித்­தார்கள் என்றும் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை ஒலிப்­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு நேற்றுமுன்தினம் புதன்­கி­ழமை காலை நேர­டி­யாக விஜயம் செய்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிகழ்ச்­சியில் கலந்து கொண்டு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று ஒரு வருடம் பூர்த்­தி­யாகும் நிலையில் நேற்று முன்தினம் காலை 7.00 மணிக்கு இலங்கை ஒலிப்­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு விஜ­யத்தை மேற்­கொண்டார்.

அண்­மைக்­கா­லத்தில் அரச தலைவர் ஒருவர் இலங்கை ஒலிப்­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு விஜயம் மேற்­கொண்­ட­வ­ராக ஜனா­தி­பதி திகழ்­கிறார்.

ஜனா­தி­ப­தியின் இவ் விஜயம் தொடர்­பாக உயர் அதி­கா­ரி­களைத் தவிர வேறு எவரும் அறிந்­தி­ருக்­க­வில்லை. இவ­ரது நிகழ்ச்­சியில் மேலும் கருத்து தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி, நாட்டில் தன்­னு­டைய தலை­மைத்­து­வத்தின் கீழ் ஜன­நா­யகம் மனித உரி­மைகள் பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவை தொடர்பில் அரசு என்ற ரீதியில் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நேர்மையோடு. விடுவிப்போம்படையினரைபோற்குற்றத்தில் இருந்து
Comments (0)
Add Comment