கரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத் தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் போர் தீவிரமாக நடந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு போர் வீரர்களையும், இராணுவத் தளபாடங்களையும் அள்ளிக்கொடுத்தது காங்கிரஸ். அந்த நேரத்தில் தமிழக த்தை ஆண்ட கருணாநிதி போரைத் தடுக்க முயற்சி செய்தாரா? தனது எம்.பி.க்களை வாபஸ் வாங்கினாரா, இலங்கை படுகொலையில் ராஜபக் ஷ முதல் குற்றவாளி என்றால், அடுத்த குற்றவாளி கருணாநிதிதான். இவரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
முதல்வரின் சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டு மக்களிடத்தில் கூறினாலே போதும், நமக்கு வெற்றி கிடைத்துவிடும். நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்து, உல்லாசம் அனுபவித்த கூட்டம் இன்று ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா மீது இல்லாத குற்றங்களைச் சுமத்துகிறார்கள். புறம்பேசுகிறார் மு.க. ஸ்டாலின். ஜெயலலிதா பொய் சொல்கிறார் என ஒருமையில் ஸ்டாலின் பேசி வருகிறார். நாவை அடக்கிப் பேச வேண்டும். இல்லையேல் அடக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண் டிவரும் என்றார்.