போலி கடவுச்சீட்டில் நான்கு பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற இராஜதந்திரி கைது..

சட்டவிரோதமாக நான்கு பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற இலஙகை ந்இராஜதந்திரி ஒருவர் இத்தாலி விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட  நபர்  சுமார் 50 வயதுயவர் எனவும் கூறப்படுகின்றது.

டோகாவில் இருந்து தனது மனைவி மற்றும் சுமார் 20 வயதுகளை உடைய  இரண்டு யுவதிகள் மற்ரும் இரண்டு இளைஞர்களை அழைத்து  சென்றபோதேஅவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமதும் மற்றும் மனைவியினதும் இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்களுடன், குறித்த நான்கு பேரினது கடவுச் சீட்டுக்களையும் இத்தாலிய குடிவரவு அதிகாரிகளிடம் கொடுத்த போதே அவர்கள் சந்தேகம் கொண்டு விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையின்போது  அவர்களை தமது மகள்மார் என்றும், இளைஞர்களை மருமகன்கள் என்றும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

எனினும்  அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில், நால்வரினதும் கடவுச்சீட்டுகள் மோசடி செய்யப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதோடு  அவரின்  கைப்பையில் இருந்து சிங்களவர்களான நான்கு இளைஞர்களும், கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்ற  கடவுச்சீட்டும்  மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த இராஜதந்திரி தமது உறவினர் அல்ல என்றும், 4000 யூரோ கொடுத்து வெளிநாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவருடன் சென்ற நால்வரும்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இராஜதந்திரியின் உண்மையான பிள்ளைகளின் கடவுச்சீட்டுகளில் திருத்தம் செய்தே அவர் இந்த மோசடியை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த  இராஜதந்திரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவரது மனைவியும், நான்கு இளைஞர்களும் இலங்கைக்கு  திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இத்தாலிஇராஜதந்திரிகைதுபொலிஸார்போலிகடவுச்சீட்டுவிமானநிலையம்
Comments (0)
Add Comment