போலீஸ் விசாரணைக்கு பயந்த முதியவர் 40 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை

அர்ஜென்டினாவில் போலீசுக்கு பயந்து முதியவர் ஒருவர் கிரேனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பியூனஸ் அயர்ஸைச் சேர்ந்த 75 வயதான ஜூலியோ அல்போன்ஸோ கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத் தகராறில் வீட்டில் உள்ளவர்களைத் தாக்கியுள்ளார்.

இது தொடர்பான வழக்கில் போலீசார் தேடி வந்த நிலையில், போலீஸ் விசாரணைக்கு பயந்த ஜூலியோ 40 அடி உயர கிரேன் மீது ஏறியுள்ளார்.

சுற்றி  இருந்தவர்கள் சமாதானம் செய்தும் கேளாமல் அங்கிருந்து குதித்து அவர்  தற்கொலை செய்து கொண்டார்.

அர்ஜென்டினாசெண்பகம்தற்கொலைபொலிஸார்முதியவர்
Comments (0)
Add Comment