பௌத்த மதம் தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு பிரிவும் அகற்றப்படமாட்டாது – மைத்திரி

தற்போதைய அரசியலமைப்பில் இருப்பது போலவே, பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கும் ஊக்கமளிப்பதற்கும் தற்போதய அரசாங்கம் கடப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். திருகோணமலை கோமரங்கடவல ரங்கிரி உல்பத்த ரஜமகா விகாரையின் புதிய வழிபாட்டுக்கான கட்டிடங்களை சாசனத்துக்கு அர்ப்பணிக்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதம் தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு பிரிவும் அகற்றப்படமாட்டாது. அரசாங்கத்தை அரசியல் ரீதியில் எதிர்ப்போர் இது தொடர்பில் முன்னெடுத்து வரும் பொய்ப் பிரச்சாரங்கள் தொடர்பில் கவலையடைகிறேன். வடக்கு கிழக்கிலுள்ள விகாரைகளில் தங்கியிருக்கும் மதகுருமார்களின் அடிப்படைத் தேவைகளான வதிவிடம், குடிநீர், மின்சாரம், சுகாதார வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம்அரசியலமைப்புஊக்கமளிப்புசிறிசேனாபாதுகாப்புபேச்சுபௌத்தமதம்
Comments (0)
Add Comment