மகாவலி அபிவிருத்தி சிங்கள குடியேற்றத்தின் இரகசிய நிரல்!

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு உருவாக்கப்பட்டது ஒட்டு மொத்த நாட்டின் அபிவிருத்திக்காக என்பது தான் பொதுவான கொள்கை. ஆனால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை செயல்படும் விதம் உண்மையில் அரசியல் யாப்புக்கு உட்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறியே. மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் செயல்பாட்டின் கீழ் வர்த்தமானி பிரசுரம் மூலம் விடுவிக்கப்படும் பிரதேசங்களில் அவர்களின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளே காணப்படுகின்றன.

13 வது திருத்தத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களின் காணிகளுக்குரிய உரித்து முதலமைச்சருக்கு உரியது. முதலமைச்சரே அங்கு காணி அமைச்சராவார். எனவே  மகாவலி அபிவிருத்தி அதிகார சபை வட கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இறங்கும் போது உரிய மாகாண சபைகளின் ஆதரவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மகாவலி அபிவிருத்திக்குரிய காணிகளை வழங்கும் போது முதலமைச்சர்களின் சிபாரிசுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் உரிய மாகாணத்திற்குரிய காணி அமைச்சராக உள்ள போது மகாவலி அபிவிருத்தி அதிகார சபையானது தான்தோன்றித்தனமாக செயற்படுவது சரியா என்பதை இந்த அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆனால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை சிங்கள மக்களுக்கு உரியதாகவே செயற்படுகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. தமிழ் முஸ்லீம் மக்களை புறக்கணிக்கிறது என்பது எனது குற்றச்சாட்டு.

வடகிழக்கு பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை செய்வதற்கான ஒரு இரகசிய நிகழ்ச்சி நிரலுக்குரியது இந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என மக்களால் கருதப்படுகிறது. அமைச்சரவை பத்திரங்கள் மூலம் தமது சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்காகவே இந்த மகாவலி அபிவிருத்தி அமைச்சு பயன்படுகிறது.

இந்த மகாவலி நீரில் வராத பிரதேசங்கள் மகாவலி அபிவிருத்தி பிரதேசங்களுக்குள் உள்வாங்கப்பட்டு அவர்கள் செய்யும் செயற்பாடுகள் நியாயமானதாக இருக்கவில்லை.

கொக்குளாய் பிரதேசத்தில் இநத மகாவலி வலயத்தின் L வலயம் என்ற ஒரு அபிவிருத்தி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அந்த பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரித்து அவற்றை சிங்கள குடியேற்றங்களுக்கு செயல்படுத்தினார்.

அண்மையில் நான் வெலிஓயா மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு (DCC க்கு) சென்ற பொழுது அங்கு ஒரு குற்றச்சாட்டு வந்தது. முல்லைத்தீவில் வாழ்ந்த 55 சிங்கள பூர்வீக குடிகளுக்கு கூட அவர் எந்த காணிகளையும் வழங்கவில்லை.

அனைத்தையும் எடுத்து குடியேற்றத்துக்காக வரவழைக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். எனவே அந்த விடயத்தில் முல்லை மாவட்டம் பாதிக்கப்பட்டிருந்தது வர்த்தமானி அறிவித்தல் விடுவிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தி அதிகார சபையானது 13 வது திருத்தத்தின் கீழ் ஊடுருவல் செய்கின்றது எனக் கூறினார்.

காணிகள்குடியேற்றம்கொக்குளாய்சிங்கள குடியேற்றம்தமிழர்கள்வெலிஓயா
Comments (0)
Add Comment