மகிந்தன் பாதையில் மைத்திரி: ஜே.வி.பி 

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரிவின் சில்வா தெரிவித்துள்ளார். பேசிப் பேசிய காலத்தை கழிப்பதை விடுத்து செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று பத்திரமுல்லையில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் பலமடைந்து ஒரு வருடம் ஆகிய பின்னரும் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றகச்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வை எட்டவேண்டும் என்று வலியுறுத்திய அவர்  இந்த சந்தர்பத்தை தவறவிட்டால் இனியும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சுய லாபத்திற்காகவும் அதிகாரத்தை தக்க வைக்கும் நோக்கிலும் அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்கிறது என்றும் திருடர்களுடன் கைகோர்த்து அரசாங்கம் ஆட்சி நடத்துவதாகவும் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை மகிந்தவின் பாதையிலேயே மைத்திரி – ரணில் அரசாங்கம் பயணிக்கிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜே.வி.பிதமிழர் பிரச்சினைமகிந்தமக்கள் விடுதலை முன்னணிமைத்திரிரிவின் சில்வா
Comments (0)
Add Comment