மகிந்தவின் புதிய சபதம்…

எவராலும் அசைக்க முடியாத நாடளாவிய அரசியல் கூட்டணியை கட்டியெழுப்பவுள்ளதாக மகிந்த ராஜபக்க்ஷ  தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் வாக்கு வங்கியுள்ள கட்சிகளுடன் இணைந்து நாட்டிற்கு எதிரான சக்திகளை தடுப்பதற்காக இந்த கூட்டணியை உருவாக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வருடமும் மூன்று மாதங்களும் தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே தமது முதன்மை இலக்கு எனவும் மஹிந்த ராஜபக்ஸ கூறினார்குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தல் நிறைவுபெறும் வரை, தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக மஹிந்த ராஜபக்ஸ தனது விசேட உரையில் கூறினார்.

அதோடு , ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு தாம் மதிப்பளிப்பதாகவும் மஹிந்த ராஜக்ஸ இதன்போது  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டணிபொதுத்தேர்தல்மகிந்தமாகாண சபைத் தேர்தல்
Comments (0)
Add Comment