மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார் சோனியா காந்தி

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளை பணிவுடன் ஏற்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றும் என்று நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல், இருமாநிலத்தில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என்றும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். மக்கள் மதிப்பை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்வோம் என்றும் கூறியுள்ளார்

அகில இந்திய காங்கிரஸ் கட்சிஅரியானாசட்டப்பேரவைசோனியா காந்திதலைவர்தேர்தல்பொதுமக்கள் பாஜகமகாராஷ்டிராமாநிலம்முடிவுராகுல் காந்திவாக்குறுதி
Comments (0)
Add Comment