நியூட்ரினோ விவகாரத்தில், கேரளாவில் தங்கள் கட்சியினரின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு தமிழக மார்க்சிஸ்ட் கட்சியினர் செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பிறகே அறிவியல் வளர்ச்சி என்பது இருக்க வேண்டும் என்று கூறினார். நியூட்ரினோ திட்டத்திற்கு கேரளா மற்றும் அசாம் மாநிலம் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், 8 லட்சம் டன் வெடிபொருட்களை பயன்படுத்தி பாறைகளை தகர்க்கும் போது முல்லைப் பெரியாறு அணை மற்றும் இடுக்கி அணைக்கு பாதிப்பு ஏற்படும் என குறிபிட்டார்.
நியூட்ரினோ திட்ட விவகாரத்தல் கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்ததனின் நிலைப்பாட்டை அறிந்த பின்னர் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியினர் முடிவெடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தினார்.