மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறேன் – வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று மாலை கடலூர் செல்லும் வழியில் புதுவை வந்தார். புதுவையில் ம.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய வைகோ பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:– புதுவையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறேன். புதுவையில் மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்றால் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். புதிய மதுக்கடைகளுக்கு அனுமதி தரப்படாது. பின்னர் முழு மதுவிலக்கு அமுல்படுத்தப்படும். புதுவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாநில அந்தஸ்து, ரூ.6,500 கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் அரசை, மத்திய அரசு செயல்படவிடாமல் முடக்கி வருகிறது. இதனால் தான் அங்கும் தனி மாநில அந்தஸ்து கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறி பொதுமக்களுக்கு பணத்தை வினியோகித்து வருகின்றன. இதற்கு அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதற்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. அப்பாவி மக்களின் வாகனங்களில் மட்டுமே தேர்தல் ஆணையம் சோதனை நடத்துகிறது. முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் வாகனங்களில் சோதனை நடத்துவது இல்லை. இவ்வாறு வைகோ கூறினார்.

ஆலோசனைகடலூர்நிருபர்நிர்வாகிபுதுவைபேட்டிபொதுச்செயலர்மதிமுகவைகோ
Comments (0)
Add Comment