மக்கள் நலக் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – முத்தரசன்

மக்கள் நலக் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.  

திருவாரூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய  முத்தரசன்,  தமிழகத்தில் சட்ட ஒழுங்கு தொடர்ந்து மிகவும் மோசமாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் உடுமலைப்பேட்டையில் ஆணவப் படுகொலை நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தினார்.

மக்கள் கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை என்று கூறிய முத்தரசன் தங்கள் அணியில் இணைவது குறித்து  தேமுதிக தலைவர் விஜயகாந்த்,  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதிலுக்காக காத்துக்கொண்டிருப்பதாகக் தெரிவித்தார்.  அவர்களின் பதிலுக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

இந்தியகட்சிகம்யூனிஸ்டிகுழப்பம்செயலாளர்நலக்கூட்டணிமக்கள்மாநிலம்முத்தரசன்
Comments (0)
Add Comment