மக்.நல.கூட்டணியில் ஆம்ஆத்மி இணைய உள்ளதாக தகவல்

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, திமுக , அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தலைமையில் தனிய அமைய உள்ளது.   இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில், மதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் உள்ளது.   தற்போது, இதன் புதுவரவாக அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதனை மெய்பிக்கும் வகையில், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த ஆம் ஆத்மி தலைவர் சோம்நாத் பாரதி சென்னை வந்துள்ளார். அவர்  வைகோவை உள்ளிட்ட தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச உள்ளார்.

அதிமுகஆம்ஆத்மிகட்சிசட்டசபைதமிழகம்திமுகதேர்தல்பாஜகபாமக
Comments (0)
Add Comment