மங்கள சமரவீராவை சுஷ்மாஸ்வராஜ் சந்தித்து பேசினார் சுஷ்மா சுவராஜ்

மீனவர்கள் பிரச்னையை மனிதநேயத்துடன் அணுகிப் பேசித்தீர்க்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடம் வலியுறுத்தி உள்ளார். இத்தாலி கப்பல் ஊழியர்கள் விவகாரத்துடன் தமிழக மீனவர்கள் பிரச்னையை ஒப்பிடக் கூடாது என்றும் அவர் அப்போது கூறினார்.

முன்னதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீராவை சுஷ்மாஸ்வராஜ் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு விவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் சயத் அக்பரூதின், இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் மீனவர் பிரச்னை வலுவாக எழுப்பப்படும் என்றார்.

மேலும், உணர்வுபூர்வமான இந்த விவகாரத்தை, மனிதாபிமான அடிப்படையில் இருநாடுகளும் அணுகும் என்று சயத் அக்பரூதின் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காண முடியாது என்றபோதிலும், நட்பு ரீதியாகவும், கடல் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் என்ற அடிப்படையிலும் அணுகப்படும் என்று அவர் கூறினார்.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ் அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அப்போது, தமிழர் நிலப்பிரச்னை உள்ளிட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர்இலங்கைசமரவீரசுஷ்மா சுவராஜ்சுஷ்மா ஸ்வராஜ்பிரச்சனைபிரதமர்பேசிதீர்வுமங்களமனிதநேயம்மீனவர்ரணில்விக்கிரமசிங்கவெளியுறவுத்துறை
Comments (0)
Add Comment