மங்கள சமரவீர பிரித்தானியாவுக்கு பயணம்!

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதிகாரபூர்வ பயணமாக நாளை பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது அவர், வரும் 11ஆம் நாள் மாலை 6 மணியளவில் லண்டனில் உள்ள சதாம் இல்லத்தில் சிறிலங்காவின் நல்லிணக்க செயற்பாடுகள் என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ளார்.
ஒருவாரகாலப் பயணமாக வரும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் தங்கியிருக்கும் போது, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்சனைச் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் சில தனிப்பட்ட நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தெரசா மே அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், லண்டனுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளும் சிறிலங்காவின் முதலாவது உயர்மட்டப் பிரமுகர் மங்கள சமரவீரவே என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்இலங்கைபயணம்பிரித்தானியாமங்களசமரவீர
Comments (0)
Add Comment