மட்டக்களப்பில் இரு அருட்தந்தையர்களை தேடும் பொலிஸார்

மட்டக்களப்பில் உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து வைத்த இரு அருட்தந்தையர்களை தேடி இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பொலீசார் மீண்டும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து விசாரித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் நடைபெறும் சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தை மத குருமார் என்ற வகையில் அருட்தந்தை யோசப் மேரி மற்றும் அருட் தந்தை ஜெகதாஸ் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

அத்துடன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கோரி ய போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இன் நிலையில் இன்று காலை மட்டக்களப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பொலீசார் அருட்தந்தை யோசப் மேரி மற்றும் அருட் தந்தை ஜெகதாஸ் பாதர் ஆகியோரை தேடியுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கான நீதிமன்ற தடை உத்தரவையும் பொலிஸா வாசித்து விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

Comments (0)
Add Comment