மட்டக்களப்பில் இளைஞர்களால் யுவதி கடத்தல்.- மீட்ட பொதுமக்கள்

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு சென்ற யுவதி ஒருவரை , இளைஞர் குழுவொன்று  கடத்திச் செல்ல முற்பட்டபோது,   பொதுமக்கள் யுவதியை கடத்தல் குழுவிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

அதோடு  சம்பந்தப்பட்ட  இளைஞர்களையும் பொதுமக்கள்  மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம்  நேற்றையதினம்  களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில்  இடம்பெற்றுள்ளது.

சம்பவதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளம்பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில்  கடத்தி   செல்லப்படுவதை அவதானித்த பொதுமக்கள் விரைந்து  பின்தொடர்ந்து சென்று களுதாவளை பிரதேச சபைக்கு சமீபமாக முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர்.

அவ்வேளையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும் மற்றைய இளைஞர்கள் இருவரும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

எனினும் பொதுமக்கள் சாதுரியமாகச் செயற்பட்டு யுவதியை மீட்டதோடு சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடத்தப்பட்ட யுவதி போரதீவைச் சேர்ந்தவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காதல் விவகாரமே இந்தக் கடத்தலுக்குக் காரணம் என  விசாரணைகளில் இருந்து புலப்படுவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

அதோடு  சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கடத்தல்பொலிஸார்மட்டக்கள்ப்புயுவதி
Comments (0)
Add Comment