மட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில், வெடிபொருள் இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு நகருக்கூடாக செல்கின்ற அரசடி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினூடாகவே, போக்குவரத்து இடம்பெறுவதாகவும் இதனால் அங்கு சற்றுப்பதற்றமான சூழல் நிலவுவதாகவும் உறுதிப்படுத்தப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.