மட்டக்களப்பில் மாணவியை மதம்மாற்றிய ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலை…

மட்டக்களப்பு களுவங்கேணியில் சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கல்விகற்கும் மாணவி ஒருவரை  இஸ்லாம் மதத்திற்கு மாற்றியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து அப்பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்த  போராட்டத்தின் பலனாக குறித்த  ஆசிரியர் அந்த  பாடசாலையிலிருந்து வேறொரு பாடசாலைக்கு இடம்மாற்றப்பட்டார்

இந்நிலையில் அவர் இன்று புதிய பாடசாலைக்கு தனது கடமைகளை பொறுப்பேற்க சென்ற வேளையில்,

அப்பிரதேச மக்கள் இவ்வாறான இனவாத ஆசிரியர் தமது பாடசாலைக்கு தேவையில்லை என கூறி   அந்த ஆசிரியரை பாடசாலைக்கு உள்ளே செல்லவிடாமல் திருப்பியனுப்பியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

ஆசிரியர்மட்டக்களாப்புமதம் மாற்றம்மாணவி
Comments (0)
Add Comment