மட்டக்களப்பில் முன்னாள் போராளியொருவர் தற்கொலை…

உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு களுதாவளையில் வசித்து வந்த வைரமுத்து திசவீரசிங்கம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில் , முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் உடலில்யுத்த துகள்கள் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இதேவேளை    ஏற்கனவே கடந்த கடந்த 15 திகதி முன்னால் அவர்  தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  வீடு திரும்பிய நிலையில் தனது வீட்டில் நேற்றையதினம்  அவர்  மீண்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில்,  முன்னாள போராளியான வைரமுத்து திசவீரசிங்கத்தின்    தற்கொலை அவரது  குடும்பத்தை மாத்திரமின்றி அப் பகுதியையே பெரும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்கொலைமட்டக்களப்புமுன்னாள் போராளி
Comments (0)
Add Comment