மட்டக்களப்பு உணவகங்களில் திடீர் பரிசோதனை

மட்டக்களப்பில்  50 இற்கும் அதிகமான உணவகங்கள் நேற்றைய தினம் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால், இத் திட்டம் மேற்கொள்ளப்ட்டதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

சுத்தமான, நல்ல பழுதடையாத உணவுப் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த திட்டம் அமுல்படுத்தக்கப்பட்டதாகவும் கூற்ப்படுகின்றது.

சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் திருமதி கிறேஸ் நவரெட்ணராஜா தலைமையில்  இப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலவதியான உணவுப் பதார்த்தங்கள், மரக்கறிகள் மற்றும் குளிர்பானங்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், தொடர்புபட்ட உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

உணவகங்கள்நடவடிக்கைபரிசோதனைமட்டக்களப்பு
Comments (0)
Add Comment