மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வெடிக்காத நிலையில் குண்டொன்று மீட்பு…

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாயலம் உள்ளிட்ட நாட்டின் மூன்று தேவாயலங்கள் மற்றும் விடுதிகளில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இந் நிலையில் மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வெடிக்காத நிலையில் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மட்டக்களப்பில் சியோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வெடிக்காத நிலையில் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.

இன்று ஈஸ்ரர் பெருநாளை முன்னிட்டு அதிகாலையே தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் ,

ஒவ்வொரு தேவாயலத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தபோது குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவாலயம்மட்டக்கள்ப்புமீட்பு
Comments (0)
Add Comment