வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி இடம்பெற்வுள்ள கதவடைப்பு போராட்டத்துக்கும் நீதிக்கான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்கும் வருமாறு அழைப்பு விடுத்து மட்டக்களப்பு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து பேரெழுச்சி ஆரம்பமாகும் என்றும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று இரவிலிருந்து பரவலாக ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகளில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதோடு இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும், காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இப்போராட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பு என்றும் இந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.