மண்டைதீவில் இலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் மீண்டும் அரசாங்கம் வடகிழக்கில் காணி சுவீகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்க்கான காணிபிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் கடற்படையின் வசமுள்ள 18 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்யும் பணிகள் வரும் 11ம் திகதி காலையில் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மண்டைதீவில் அமைந்துள்ள வெல்சுமன கடற்படை தளம் அமைந்துள்ள 18 ஏக்கர் காணியையும் நிரந்தரமாக கடற்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டு, அளவீட்டு பணிக்கு முன்னதாக காணி உரிமையாளர்களிற்கு அறிவித்தல் விடப்பட்டிருந்தது.


இந்நிலையில் ஐனாதிபதி மற்றும் பிரதமர் வழங்கிய உத்தரவாதங்களின் பின்னர் அந்த அளவீட்டு பணி கைவிடப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அது கைவிடப்படவில்லை என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

இதேவேளை 1990ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகள் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவீகரிப்புமண்டைதீவு கடற்படை முகாம்
Comments (0)
Add Comment