மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடுத்திருந்த மனு நிராகரிப்பு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மீதான விசாரணையில் தன்னை விடுதலைப் புலிகளின் ஆதரவு தரப்பாக இணைக்கக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடுத்திருந்த மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் இந்த வழக்கு விசாரணையின் போது வைகோ வந்திருந்து பங்கேற்று கருத்து கூறலாம் என்று இந்திய அரசின் சட்டவிரோத தடுப்புச் செயல்கள் தீர்ப்பாயம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு தடை குறித்து விசாரித்துவரும் சட்டவிரோத தடுப்புச் செயல்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதி மிட்டல் வழங்கியுள்ள இந்த உத்தரவில், இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பார் மாதம் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்றும், அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய அரசு கடந்த மே மாதம் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. வழக்கமாக இந்த அமைப்புக்கு விதிக்கப்படும் இரண்டு ஆண்டு தடைக்கு பதிலாக தற்போதைய தடை மட்டும் ஐந்து ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று தமிழகத்தைச் சேர்ந்த மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் குற்றம் சாட்டியிருந்தன.

இதனைத்தொடர்ந்து தற்போது இந்த தடை மீதான விசாரணை, இந்தியாவில் சட்டவிரோத தடுப்புச் செயல்கள் தீர்ப்பாயம் முன் துவங்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு என இந்தியாவில் அந்த அமைப்பின் பிரதிநிதிகள் யாரும் இல்லாததால் அவர்கள் தரப்பில் யாரும் இந்த விசாரணையில் பங்கேற்கவில்லை. இந்த பின்னணியில்தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னை இந்த வழக்கில் விடுதலைப்புலிகளின் ஆதரவு தரப்பாக சேர்த்துக்கொள்ளும்படி மனு தாக்கல் செய்திருந்தார். வைகோவின் மனுவுக்கு எதிராக இந்திய அரசு தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், அந்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

ஆதரவுஇணைக்கக்கோரிசெயலாளர்தரப்பாகதொடுத்திருந்தநிராகரிக்கப்பட்டிருக்கிறதுபுலிகளின்பொதுச்மதிமுகமனுவிடுதலைப்வைகோ
Comments (0)
Add Comment