மதுபோதையில் தகராறு!- தம்பியை அடித்து கொன்ற அண்ணன்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணன் ஒருவர் தனது தம்பியை பொல்லால் அடித்து கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு கேகாலை பிரதேசத்தில் நடந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த தம்பி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

40 வயதான சீமன் மனவத்தன் என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேகாலைசீமன் மனவத்தன்பொலிஸார்
Comments (0)
Add Comment