மதுரை மீனாட்சியம்மன் ஆலையத்துக்குள் மொபைல் கொண்டு செல்ல இன்று முதல் தடை!

வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அலை பேசியை எடுத்துச் செல்ல இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி பெரும் தீ விபத்து நடந்ததால் அங்கு இருந்த கடைகள் தீக்கிரையாகின, அத்துடன் வரலாற்றுசிறப்பு மிக்க 1000கால் .மண்டபமும் சேதத்தை சந்தித்தது . இதன் காரணமாக பாதுக்காப்பு பலப்படடுத்தப்பட்டுள்ளது எனவே ஆலயத்தின் உள்ளே மொபைல் போன் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்படும் என்று அறிவுப்பு ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.
அந்தந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.ஆக இன்று முதல் அலைபேசியை ஆலயத்துக்குள் எடுத்து செல்வது முற்றிலும் தடை செய்யப் பாடுகிறது .
அலை பேசியை எடுத்து செல்லும் பக்தர்களின் அலைபேசியை பாதுகாக்கும் வசதி வடக்கு மற்றும் மேற்கு கோபுரவாசலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக 1 செல்பேசிக்கு 10ரூபா வீதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைதமிழகம்போன்மதுரைமீனாட்சியம்மன்
Comments (0)
Add Comment